ரத்தமாரே.. ரத்தமாரே.. தனது மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா!!

Photo of author

By Jeevitha

ரத்தமாரே…. ரத்தமாரே…தனது மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா!!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவர்களின் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்தது.
இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது எனக் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டர்,மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

வாடகை தாய் கொண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, குழந்தைகளை வளர்ப்பதிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார். இந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு உள்ளோம் என விக்னேஷ் சிவன் கூறினார். இதன்பின்னர், ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா, உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன், என தன் இரண்டு மகன்களின் முழு பெயர்களையும் வெளியிட்டார்.

அதற்கு பின் சில காலமாக அக்குழந்தைகளின் முகங்களை சமூக வலைத்தளங்களில் காட்டாமல் இருந்தனர். சிறிது நாட்களுக்கு முன் நயன்தாரா, புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தொடங்கினார். அதில் தான்,அவர் முதன்முறையாக அக்குழந்தைகளின் முகம் தெரியுமாறு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும் அக்குழந்தைகளின் பிறந்தநாளான இன்று குடும்பமாக சேர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் . இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.