வெறுப்பு வேண்டாம்!. அமைதியே வேண்டும்!.. பஹல்காம் தாக்குதில் இறந்த வினய் நர்வாலின் மனைவி உருக்கம்!…

Photo of author

By அசோக்

வெறுப்பு வேண்டாம்!. அமைதியே வேண்டும்!.. பஹல்காம் தாக்குதில் இறந்த வினய் நர்வாலின் மனைவி உருக்கம்!…

அசோக்

vijnay

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும்.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. சிந்து நதியின் நீர் இனிமேல் பாகிஸ்தானுக்கு இல்லை எனவும் இந்தியா அறிவித்துவிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. ஏனெனில், இரண்டு நாடுகளும் எல்லைகளில் சண்டை போட துவங்கிவிட்டார்கள். ஒருபக்கம், பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பஹல்கம் தாக்குதலில் மரணமடைந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி ஊடகங்களிடம் பேசியிருக்கிறார். வினய் நர்வாலின் பிறந்தநாளை ஒட்டி நேற்று நடத்தப்பட்ட இரத்த தான முகாமில் கலந்துகொண்ட அவர் ‘பகல்காம் தாக்குதலுக்கு பின் காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியை நாங்கள் விரும்புகிறோம். கணவர் காட்டிச் சென்ற வழியில் நாட்டுக்கு சேவை ஆற்றுவேன்’ என பேசியிருக்கிறார். திருமணமான ஒரு வாரத்தில் பகல்காமுக்கு தேனிலவு வந்து ஹிமான்ஷி தனது கணவரை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.