ரஜினி – விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ்!.. ஒரே களேபரமா இருக்குமே!…

0
13
rajini
rajini

Rajini vijay: விஜயின் சம்பளம் எப்போது ரஜினியை விட அதிகமாகிப் போனதோ, அவரின் படங்கள் எப்போது ரஜினி படங்களை விட அதிக வசூலை பெற துவங்கியதோ அப்போது முதலே ரஜினி – விஜய் போட்டி என்பது கோலிவுட்டில் துவங்கிவிட்டது. விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். என்னை அவரோடு ஒப்பிட வேண்டாம் என ரஜினி ஓப்பனாகவே பேசினார். ஆனால், யாரும் அதை கேட்கவில்லை. ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன கழுகு காக்கா கதையில் ரஜினி காக்கா என சொன்னது விஜயைத்தான் என அவரின் ரசிகர்கள் நினைத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ரஜினி படம் வந்தாலே விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் அப்படத்திற்கு எதிராக ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்ய துவங்கிவிட்டனர். வேட்டையன் படம் வெளியான போதும் இப்படத்தின் ரிலீஸான முதல் நாளே படம் ஃபிளாப் என விஜய் ரசிகர்கள் பதிவிட்டார்கள். இதுவே அப்படத்தின் வசூலையும் பாதித்தது. உண்மையில் ரஜினி பார்த்து வளர்ந்த பையன்தான் விஜய். ரஜினியின் படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய்.

ஆனால், ஒருகட்டத்தில் விஜயை அடுத்த சூப்பர்ஸ்டார் என சிலர் பேச அமைதியாக அதை ரசித்தார் விஜய். ஆனால், அது சர்ச்சையில் கொண்டு போய் முடிய சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் என ஒரு விழாவில் பேசினார். ஒருபக்கம் ரஜினி மற்றும் விஜயின் பழைய படங்களை ரீ- ரிலீஸ் செய்ய துவங்கிவிட்டார்கள். அதற்கு காரணம் விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸில் 20 கோடி வசூல் செய்தது.

ஆனால், ரஜினியின் பாபா படம் வெளியாகி பெரிய வசூலை பெறவில்லை. இந்நிலையில் வருகிற 18ம் தேதி ரஜினியின் தளபதி படமும், விஜயின் சச்சின் படமும் ஒன்றாக ரீ-ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. எனவே, ரஜினி – விஜய் ரசிகர்கள் மீண்டும் மோதிக்கொள்ளும் சூல்நிலை உருவாகியுள்ளது.

Previous articleபேச்சுரிமையை குற்ற வழக்கால் தடுக்க முடியாது – சி.வி. சண்முகம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு
Next articleகுழந்தைப் பேறு, கணவன் மனைவி ஒற்றுமையைத் தரக்கூடிய ஸ்ரீ ராம நவமி 2025..!! வழிபடும் முறை..!!