இளையராஜாவுக்கு தேவை இதுதான்!.. விஜய் ஆண்டனி போட்டு உடைச்சிட்டாரே!…

0
16
ilayaraja

இளையராஜாவின் பழைய பாடல்களை இப்போதும் திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதேபோல், குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

அந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ போன்ற பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், படத்தில் தன்னுடைய பாடல்களை பயனடுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும், 7 நாட்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், இளையராஜாவின் நோட்டீஸுக்கு விளக்கமளித்துள்ள குட் பேட் அக்லி பட நிறுவனம் ‘காப்புரிமை வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட நிறுவங்களிடம் அனுமதி வாங்கியே குட் பேட் அக்லி படத்தில் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். முறையாக என்.ஓ.சி வாங்கியிருக்கிறோம்’ என கூறினார்கள்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி ‘பாடலை பயன்படுத்தும் முன்பு தன்னுடைய அனுமதியை வாங்க வேண்டும் என இளையராஜா சார் நினைக்கிறார். ஒரு பாட்டை உருவாக்குவது என்பது பெத்தவங்க மாதிரிதானே. அதனால் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என்றுதான் அவர் நினைக்கிறார். அவர் பணத்தாசை பிடித்தவர் எல்லாம் இல்லை. சம்பளமே வாங்காமல் பல படங்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். ராஜ்கிரண், ராமராஜன் போன்றவர்களை உருவாக்கியிருக்கிறார்’ என பேசியிருக்கிறார்.

Previous articleபத்மபூஷன் விருது பெறும் 5வது ஹீரோ அஜித்!.. மீதி 4 பேர் யாருன்னு தெரியுமா?!…
Next articleOTT தளங்களில் பாலியல் படங்களுக்கு தடை கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!