TVK CONGRESS: விஜய் கட்சி துவங்கி இரண்டரை வருடங்கள் ஆன நிலையில் அக்கட்சிகான ஆதரவு அதிகளவில் உள்ளது. முதல் முறை சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் தவெக, விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற அறிவிப்பை தனது முதல் மாநாட்டிலேயே அறிவித்துவிட்டது. மேலும், பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி என்று கூறியதால், இவர்களை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் விஜய் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கபட்டது.
தற்போது வரை, தவெக உடன் எந்த கட்சியின் கூட்டணியும் உறுதியாகவில்லை. விஜய் காங்கிரசுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருவதால், அவர்களுடன் கூட்டணி அமைப்பார் என்று நினைத்த சமயத்தில், காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து திமுகவிடம் பேச ஐவர் குழு அமைத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனால் காங்கிரஸ்-தவெக கூட்டணி கிடப்பிலேயே இருந்தது.
இவ்வாறான நிலையில், விஜய் அடுத்த எம்ஜிஆர் என்று பலரும் கூறி வருவது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரிடம் கேட்ட போது, சிவாஜியும், விஜயகாந்தும் கூட தான் கட்சி ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு கூடாத கூட்டமா? ஆனால் இவர்களால் எம்ஜிஆர் ஆக முடியவில்லை. அதே போல் தமிழகத்தில் ஒரே ஒரு எம்ஜிஆர் தான். விஜய் ஒரு போதும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு தவெக கூட்டணியில் சேர்வதில் விருப்பமில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.