vijay:தவெக மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு விருது கொடுக்க விஜய் முடிவு.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி அரசியலில் களம் இறங்க போவதாக அறிவித்தார் விஜய். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். பிறகு கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார். இந்த மாநாடு சுமார் 170 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் விஜய் அரசியல் எதிரி யார்? கொள்கை எதிரி யார்? என அறிவித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தி 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு தமிழக மாவட்டங்கள் வாரியாக விஜய் வருகை புரிவார் என சொல்லப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சி பணிகளை செய்ய வேண்டும் என தவெக நிர்வாகிகளிடம் தெரிவித்து இருந்தார் விஜய். இந்த நிலையில் தான் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்து வழங்கப் போவதாக தவெக விஜய் அறிவித்து இருக்கிறார்.மாநாட்டிற்காக வழங்கப்பட்ட விவசாய நிலங்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
விஜய் வழங்கு இந்த விருந்தில் விவசாயிகள் மற்றும் விழுப்புரம் மாவட்ட தவெக நிர்வாகிகள் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.