ராஷ்மிகா மந்தனா வைத்த கண்டிஷன்கள்!! திருமணம் குறித்து உண்மையை போட்டுடைத்த  விஜய் தேவரகொண்டா!!

Photo of author

By Sakthi

ராஷ்மிகா மந்தனா வைத்த கண்டிஷன்கள்!! திருமணம் குறித்து உண்மையை போட்டுடைத்த  விஜய் தேவரகொண்டா!!

Sakthi

Vijay Devarakonda has talked about his love in a press interview

Vijay Devarakonda:விஜய் தேவரகொண்டா செய்தியாளர்கள் பேட்டியில் தனது காதல் குறித்து பேசி இருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா  குறித்து உண்மையை போட்டு உடைத்த  விஜய் தேவரகொண்டா. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. லைகர், தி ஃபேமிலி ஸ்டார் போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெயர் சொல்லும் அளவுக்கு வெற்றிப் படங்களாக அமையவில்லை. விஜய் தேவரகொண்டா  தற்போது சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்து உள்ளார்.

திரைஉலகில் அதிக அளவில் பேசப்பட்டு வரும் ஜோடிகளாக ராஷ்மிகா மந்தனா மற்றும்  விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார்கள். சமீப காலத்தில் இவ்விருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா மற்றும்  விஜய் தேவரகொண்டா இருவரும் ஒன்றாக பயணித்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

மேலும் இருவீட்டாரும் சமீபத்தில் திரைப்படத்திற்கு ஆடை வடிவமைக்கும் நபரின் வீடு கல்யாணத்திற்கு ஒன்றாக சேர்ந்து சென்றார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் விஜய் தேவரகொண்டா தனது காதல் பற்றி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் நடித்த சாஹிபா பாடல் ப்ரொமோஷன் விழாவில் கலந்து கொண்டார் விஜய் தேவரகொண்டா.

அவரிடம்  செய்தியாளர்கள்  தங்களுக்கு 35 வயது ஆகிறது, ஆனால் இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருக்கிறீர் என்று நகைச்சுவை கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலாக விஜய் தேவரகொண்டா நான் சக நடிகைகள் கூட டேட்டிங் செய்து வருகிறேன் எனது காதல் சாதாரண காதல் இல்லை  கண்டிஷன் நிறைவாக உள்ளது என்று கூறினார்.