ADMK TVK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. விஜய் தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதால் மிகவும் கவனமாக உள்ளார். மேலும் திமுக, பாஜக என நாலா பக்கமும் விஜய் அட்டாக் செய்யப்பட்டு வருவதால் விஜய்யின் முதல் தேர்தலே மிகவும் கடினமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
விஜய் இன்னும் தனது கூட்டணியை அறிவிக்காத நிலையில், வேறு சில விசியங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் முக்கியமாக அண்மையில் புதுச்சேரி பக்கம் விஜய்யின் கவனம் திரும்பி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் பாஜக எம்எல்ஏ சாமிநாதன் மற்றும் காரைக்கால் பகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ அசனா ஆகிய இருவரும் தவெக இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட கட்சிகளில் மாறி மாறி பலரும் இணைந்து வந்த நிலையில் தவெகவில் மட்டும் இது நிகழாமல் இருந்தது. தற்போது தவெகவிலும் அதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதற்கு முன் ஒரு முறை மதிமுகவிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தவெக இணைவதற்கான சத்திய கூறுகள் அதிகளவில் உள்ளது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு தவெகவுக்கு மேலும் பலத்தை அதிகரித்துள்ளது என தவெக தொண்டர்கள் கருதுகின்றனர்.

