செங்கோட்டையனால் தினகரனை மறந்த விஜய்.. தள்ளாடும் அமமுக!! கொண்டாட்டத்தில் இபிஎஸ்!!

0
66
Vijay forgets Dhinakaran because of Sengottaiyan. EPS in celebration!!
Vijay forgets Dhinakaran because of Sengottaiyan. EPS in celebration!!

AMMK TVK: இன்னும் 5, 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் அரங்கு வேகமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தில் மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு செயல்படுத்திய SIR பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்கிய உடன் பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டார். 

இதனையடுத்து 1 வருடத்திற்கு முன்பு அதிமுக பாஜக கூட்டணியில் சேரும் போது, தினகரன், ஓபிஎஸ், சசிகலா மூவரும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இது நிறைவேறாத நிலையில், அண்மையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் கூட்டணியிலிருந்து விலகினார்கள். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் ன்றாக இணைந்தது பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி இருந்த நிலையில் தான் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து தினகரன், ஓபிஎஸ், சசிகலா மூவரும் தவெகவில் இணைவார்கள் என்று கருதப்பட்ட சமயத்தில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவியவில்லை. விஜய் உடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தினகரன் கூறி வந்த நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு விஜய் தினகரனை கருத்தில் கொள்ளவில்லை என்ற வாதமும் வலுத்து வருகிறது. விஜய்யை வைத்து இபிஎஸ்யை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த தினகரனுக்கு விஜய்யின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசெங்கோட்டையன் பாஜகவிற்கு கொடுத்த வாக்கு.. விரக்தியில் விஜய்!! குஷியில் அமித்ஷா!!
Next articleகரூர் துயரம்.. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்ட மனு!! ஆடிப்போன விஜய்!!