TVK: தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் பெருமளவு ஆதரவை பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. கரூர் சம்பவத்திற்கு பின்பும் கூட மக்களின் கோபம் தமிழக அரசு மீது தான் திரும்பியது.
விஜய்க்கு அனுதாபம் தான் பெருகியது. இவ்வாறு விஜய்க்கு மக்கள் ஆதரவு இருந்தாலும், அரசியல் கட்சி தலைவர்களும், விஜய்யை எதிர்ப்பவர்களும் அவரை பல்வேறு விஷயங்களை விமர்சித்து வந்தனர். வார இறுதி நாட்களில் மக்களை சந்திப்பை நடத்துவது, இன்னமும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்காமல் இருப்பது, சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சமூக வலைத்தளம் மூலமாக மட்டுமே தனது கருத்துக்களை பகிர்ந்து வருவது போன்றவற்றிற்காக விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இவ்வாறு விஜய் மீது தொடர்ந்து விமர்சங்களும், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற குரலும் வலுத்து வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்து விஜய்க்கு பலத்தை கூட்டினார். தவெகவில் இணைந்த கையுடன் இன்னும் சில அமைச்சர்களும் தவெகவில் இணைய போகிறார்கள் என்று கூறிய அவர், அதற்கான பணியையும் செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் இந்த அளவிற்கு விமர்ச்சிக்கப்படுவதற்கான காரணத்தையும் செங்கோட்டையன் ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த வகையில் மும்மொழி கொள்கை அமலாக்கம், முழுநேர டிஜிபி நியமன சர்ச்சை, நகராட்சி நிர்வாக துறையில் முறைக்கேடு குறித்த அமலாக்கத்துறை கடிதம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், மற்றும் ஊழல் முறைகேடுகள் போன்ற ஆளுங்கட்சிக்கு எதிரான முக்கிய விவகாரங்கள் தவெக தரப்பில் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் இதனை காரணமாக வைத்தே தவெகவின் வாக்கு வாங்கி பிளவுபடும் என்று செங்கோட்டையன் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.