ADMK TVK: அடுத்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த இருக்கிறது. அதற்காக இப்போதிலிருந்தே அனைத்து கட்சிகளும் தேர்தல் வேட்டையை தொடங்கிவிட்டன. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவில் அதிக தொண்டர்களும், அதிமுகவின் முகங்களும் இணைந்து வருகின்றன. இவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த பணியை தவெகவும் கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், விஜய்க்கு ஜாக்பாட் அடித்ததை போல, அக்கட்சிக்கு காட் பாதராக 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவர் இணைந்த கையுடன் ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோரும் தவெக சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தற்சமயம் வரை நடைபெறவில்லை. டிடிவி தினகரன் ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார்.
ஜனவரியில் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதால், இவர் மீண்டும் NDA கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சசிகலாவின் அரசியல் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. மீதமிருப்பது ஓபிஎஸ் மட்டும் தான். எப்படியாவது மீண்டும் அதிமுகவில் இணைந்து விட வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் இவர் அதிமுகவில் சேர்ந்தால் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால், இபிஎஸ் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இவ்வாறான நிலையில் தான் ஓபிஎஸ் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வந்தார்.
பாஜக உடன் ஓபிஎஸ் அடிக்கடி பேசி வருவதன் காரணமாக தான் விஜய் இவரை கூட்டணியில் சேர்க்க மறுக்கிறார் என்று தவெக வட்டாரங்கள் கூறின. இப்படி ஓபிஎஸ்யின் நிலைமை திக்கு தெரியாமல் இருக்கும் நிலையில், செங்கோட்டையன் ஓபிஎஸ்யை கட்சியில் சேர்க்க விஜய்யிடம் பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் ஓபிஎஸ் பாஜக உடனான நெருக்கத்தை குறைத்து கொண்டால் அவரை தவெகவில் சேர்த்து கொள்ள விஜய் சம்மதம் தெரிவித்தாகவும் பலரும் கூறுகின்றனர். ஆனால் இத்தனை ஆண்டு காலம் ஓபிஎஸ்க்கு பாஜக உதவியாக இருந்தது. இதனை தவிர்த்து விட்டு அவர் விஜயுடன் கை கோர்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.