ADMK TVK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில், மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் அதிமுக அதன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்து விட்டது. மேலும் புதிதாக உதயமாகியுள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க முயன்று வருகிறது.
ஆனால் விஜய் இதற்கு பிடி கொடுக்காமல் உள்ளார். கொள்கை எதிரி என்று கூறிய பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதும், முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்ற கோரிக்கையை இபிஎஸ் ஏற்காததும் தான் இதற்கு முழு முதற் காரணமாகும். இதனை தொடர்ந்து தவெகவின் முக்கிய புள்ளி ஒருவர், தவெகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று கூறி அதிமுக-தவெக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனால் இபிஎஸ்யின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் கோபமாக மாறியது. இதன் காரணமாக இபிஎஸ் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். விஜய் தனது முதல் தேர்தலிலேயே தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது, மேலும் தேசிய கட்சியான காங்கிரஸுக்கு தமிழகத்தில் போதிய அளவு செல்வாக்கு இல்லாததால் அதனுடன் கூட்டணி வைத்தாலும் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இல்லை. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மூன்றாம் நிலை கட்சிகளும் திராவிட கட்சிகளை விட்டு விட்டு தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியம் குறைவு.
இதனை அறிந்த இபிஎஸ், முதலில் தமிழகத்தில் மூன்றாம் நிலை கட்சிகளாக அறியப்படும் தேமுதிக, பாமக உடன் கூட்டணியை உறுதி செய்து விட்டால் அதிமுக சக்தி வாய்ந்த கூட்டணியாக மாறிவிடும். இதன் பிறகு விஜய் தானாக கூட்டணிக்கு வந்து விடுவார் என்று நினைக்கிறது. இபிஎஸ்யின் இந்த வியூகம் விஜய்யிடம் எடுபடுமா இல்லை விஜய் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

