TVK: 2026 சட்டசபை தேர்தலை எதிர் நோக்கி மாநில கட்சிகளும், தேர்தல் ஆணையமும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த முறை தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியை எதிர்கொள்ள போகிறது. திமுக, அதிமுக, நாதக, புதிய கட்சியான தவெக போன்றவை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது. அதிலும் தவெகவிற்கான ஆராவாரம் பெருமளவில் உள்ளது என்றே சொல்லலாம்.
இதனால் இது ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர் கட்சியாக வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு கருத்துக்கள் பரவி வரும் வேளையில், விஜய் அவரது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற வாதத்தை முன்வைத்துள்ளார். ஆனாலும் கூட தவெக தலைமையில் இன்னும் ஒரு கட்சி கூட இணைந்த பாடில்லை. விஜயுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்ற கேள்விகள் மேலோங்கி இருந்தாலும், விஜய் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
விஜய் போட்டியிடும் தொகுதியில் தானும் நேரடியாக போட்டியிட போவதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இப்படி இருக்கும் சமயத்தில் விஜய் போட்டியிடும் தொகுதி பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது. தவெக தனது முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்கியதாலும், திருச்சியில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதாலும், அவர் திருச்சியிலுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

