சேலம் பிரச்சாரத்தில் விஜய் வைக்க போகும் ட்விஸ்ட்.. நயினார் கேள்விக்கு பதிலடி!! அப்செட்டில் பாஜக!!

TVK BJP: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விஜய் என்றே சொல்லலாம். இவர் கட்சி ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தவெகவுக்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் விஜய் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் அறுவடை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் தான் பாஜகவை தனது கொள்கை எதிரி என்று விஜய் அறிவிக்க, பாஜகவை எல்லா இடத்திலும் மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்து வந்தார்.

ஆனால் விஜய்க்கு இருக்கும் ஆதரவை கண்ட பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அப்போதும் கூட பாஜக உடன் கூட்டணி இல்லையென்பதில் விஜய் தெளிவாக இருந்தார். பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் வேளையில் விஜய் கூட்டணி அதற்க்கு பக்க பலமாக இருக்கும் என்று டெல்லி மேலிடம் நினைத்தது. ஆனால் விஜய் இதனை ஏற்றுக்கொள்ளாததாலும், பாஜகவை எதிரி என்று கூறியதால் பாஜகவின் வாக்கு வங்கியும் விஜய்க்கு செல்ல வாய்ப்பிருப்பதால்  ஆத்திரமடைந்த பாஜகவினர் விஜய்யை விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார், விஜய்யால் யார் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? 234 தொகுதிகளில் 10, 15 வேட்பாளரின் பெயரை  வரிசையாக சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஏளனமாக பேசி இருக்கிறார். இதன் காரணமாக, தவெக அடுத்ததாக சேலத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில் இதில் பாதியளவு தொகுதிகளின் வேட்பாளர்களை விஜய் அறிவிப்பார் என்று தவெகவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். விஜய்யின் இந்த செயல் நயினாருக்கு தகுந்த பதிலடியாக இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர்.