2026 தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி; சூடு பிடிக்கும் அரசியல் களம்!!

0
104

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக முன்கூட்டியே தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மாதத்திலேயே அவர் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த மாதம் விஜயின் பிறந்தநாள் வருவதால் மக்கள் நலத்திட்டங்களையும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி என அண்மையில் தொலைக்காட்சிகளில் செய்தி பரவியது.

அந்த வகையில் எம்ஜிஆரை போல விஜய்யும் மதுரை தொகுதியை குறி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் விஜய் மீனவ மக்கள் அதிகம் இருக்கக்கூடிய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தவெக வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விஜய்க்கு செல்வாக்கு அதிகம் உள்ள நிலையில் நாகையில் விஜய் தனது ரசிகர்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் விஜய் நாகை தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விஜய் அரசியல் களத்தில் தனது கவனத்தை தென்மாவட்ட பக்கம் திருப்பினால் பலன் அதிகரிக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.  

Previous articleயாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டணி அமைக்கும் தவெக; ஆட்டம் காணும் திராவிட கட்சிகள்!!
Next articleஅதிமுக தலைமை மீது அப்சட்டில் இருக்கும் ஜெயக்குமார்; மாநிலங்களவை எம்பி சீட்டு கொடுக்காததற்கு காரணம் இதுதான்!!