DMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் மூழ்கியுள்ளன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக இம்முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று முயற்சித்து வருகிறது. அதற்காக கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டுமென்று அந்த பகுதிகளில் இரண்டாம் கட்ட தலைவர்களை இறங்கியுள்ளது. தோல்வியுற்ற இடங்களில் மக்களை கவரும் பணி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
திமுகவை அதிமுக கடுமையாக எதிர்த்து வரும் சுழலில் தற்போது திமுகவை எதிர்க்க தமிழக வெற்றிக் கழகம் என்னும் ஒரு புதிய சக்தியும் உருவெடுத்துள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே தனது அரசியல் எதிரி திமுக தான் என்று கூறி வருகிறார். மேலும் விஜய்க்கு யாரும் எதிர்பார்த்திடாத அளவு ஆதரவு இருந்ததால், இதனை பகடை காயாக பயன்படுத்த நினைத்தது திமுகவின் கூட்டணி கட்சிகள். அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் தராவிட்டால் நாங்கள் தவெக கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று திமுக கூட்டணிகள் மறைமுகமாக கூறி வந்தன.
அது மட்டுமல்லாமல், இதனை நாட்களாக அமைதியாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும், சாதிய வன்கொடுமைகள் அதிகரித்தது விட்டது என்பது போன்ற கருத்துக்களை பகிர்வது திமுகவிற்கு எதிராகவே பார்க்கப்படுகிறது. இவர்களின் இந்த தொடர் கருத்தும், திமுகவிருக்கு எதிரான நடவடிக்கைகளும், ஸ்டலினுக்கு விஜய்யின் மேல் கோபத்தை அதிகரித்திருக்கிறது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

