விஜய்க்கு ஒன்றிய அரசை பற்றி ஒன்றும் தெரியாது.. லெஃப்ட் ரைட் வாங்கிய பாஜக தலைவர்!!

0
73
Vijay knows nothing about the union government.. BJP leader who bought left right!!
Vijay knows nothing about the union government.. BJP leader who bought left right!!

ADMK TVK: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் அடியெடுத்து வைத்துள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக, மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணிகளையும் செய்து வருகிறது. தவெகவுக்கு ஆதரவு அதிகளவில் இருப்பதை கண்ட பாஜக அவரை கூட்டணியில் இழுக்க முயற்சிக்க, விஜய்யோ கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார். கரூர் சம்பவத்தில் பாஜக விஜய்யின் குரலாக ஒழித்தும் ஒரு பயனுமில்லை.

விஜய் அவரது முடிவில் தீர்க்கமாக இருந்து வருகிறார். விஜய் பாஜகவை விட திமுகவையே அதிகமாக விமர்சித்து வந்ததால், தவெக பாஜகவின் பி டீம் என்று பலரும் கூறி வந்தனர். இதனை உடைதெரியும் விதமாக, நேற்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், ஒன்றிய அரசு என பாஜக பெயரை கூறாமல் விமர்சித்திருந்தார். மேலும் புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு போதுமான அளவுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யவில்லை என்ற கருத்தையும் முன்வைத்தார்.

இதனால் பாஜகவின் மூத்த நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன், விஜய்யை கடுமையாக சாடியிருந்தார். இவரை தொடர்ந்து, விஜய்யின் புதுவை பயணம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவருக்கு அரசியல் பற்றி ஏதாவது தெரியுமா? பாஜக அரசு மக்களுக்கு எவ்வளவு உதவிகளை செய்து வருகிறது. அந்த திட்டங்கள் பற்றியெல்லாம் விஜய்க்கு தெரியுமா? ஒரு கவுன்சிலர் கூட ஆகாதவர், நேரடியாக முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்றால் எப்படி முடியும் என்று சரமாறியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Previous articleதவெகவில் மேலும் ஒரு அதிமுக அமைச்சர்.. பட்டையை கிளப்பும் KAS!! துள்ளிக்குதித்த விஜய்!
Next articleஅதிமுக ஒருங்கிணைப்பு.. அவர்களிடம் கேளுங்கள்!! ஓபிஎஸ் பதிலால் பரபரப்பு!!