புரட்சி தமிழரின் தலைமைக்கு நோ சொல்லிய விஜய்.. நானே ராஜா நானே மந்திரி ரூட்டில் பயணிக்கும் தவெக!!

0
224
Buy only for the alliance.. There will be no sharing of power.. EPS check for Vijay.. Art built election field!!
Buy only for the alliance.. There will be no sharing of power.. EPS check for Vijay.. Art built election field!!

TVK ADMK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது கேள்வியாக உள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய விஜய், அனைத்து இடங்களிலும் ஆளுங்கட்சியை கடுமையாக வஞ்சித்து வந்தார். இதனால் தவெக அதிமுகஉடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில், இபிஎஸ் அவரது பிரச்சாரத்தில், பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார்.

இதனை தொடர்ந்து விஜய்யும், இபிஎஸ்யும் தொலை பேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அதில் தவெக, அதிமுக உடன் கூட்டணி அமைத்தால், முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என்று விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை பலரும் விமர்சனம் செய்ததோடு, கிண்டலடித்தும் வந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் இந்த நிபந்தனை பேசு பொருளாக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக அரசியலில் இருக்கும், சிறந்த அரசியல் அனுபவம் வாய்ந்த எடப்பாடி பழனிசாமியிடம் இந்த கோரிக்கையை விஜய் முன் வைத்ததற்க்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு முறை விஜய், இபிஎஸ்யிடம் துணைமுதல்வர் பதவியையும், 50% தொகுதிகளையும் கேட்டதாகவும், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிய வேண்டுமென்றும் விஜய் நிபந்தனை விதித்ததாகவும், வெளிவந்த தகவலினால் இபிஎஸ் குழப்பத்தில் இருந்ததாக கூறப்பட்டு வந்த சமயத்தில், இது இபிஎஸ்க்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleகரூரில் தடியடி நடத்திய காவல் துறையினர்.. திருப்பத்தை ஏற்படுத்திய தவெகவின் விளக்கம்!!
Next article41 பேரை அடித்தே கொலை செய்த போலீசார்.. நயினார் நாகேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!!