Breaking News

விஜய் OK சொல்லிட்டாரு.. முடிவு எடுக்க வேண்டியது ஓபிஎஸ் தான்!! போட்டுடைத்த செங்கோட்டையன்!!

Vijay said OK.. It's up to OPS to decide!! Sengottaiyan spoke openly!!

TVK: தற்போது எல்லா ஊடகத்திலும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த செய்தி தான் பரவலாக பேசப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதிலிருந்தே தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் இதில் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆனால் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரிவுகளினால் அதிமுகவின் வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்படும் கணிக்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைகள் என்பதால், அங்கு அதிமுகவின் வாக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சசிகலாவிற்கு கிரீன் சிக்னல் காட்டிய இபிஎஸ், தினகரன், ஓபிஎஸ்யை கிடப்பிலேயே வைத்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இவ்வாறு நான்கு திசையில் செயல்படும் இவர்களை, ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையை 24 ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ், எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிருப்தியடைந்த ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிகமானோர் விஜய் கூட்டணியில் இணைய வலியுறுத்தியதாக தகவல் கசிந்தது.

இதனை தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய செங்கோட்டையன், ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் தவெக-வில் இணைய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். இறுதி முடிவை ஓ.பன்னீர் செல்வமே எடுப்பார். கூட்டணி குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து ஓபிஎஸ் கூட்டணிக்கு வர விஜய் சம்மதம் தெரிவித்து விட்டார் என்பதையும், ஓபிஎஸ் சில நிபந்தனைகள் காரணமாக தவெகவில் சேர்வதற்கான முடிவை ஒத்தி வைத்துள்ளார் என்பதையும் காட்டுகிறது.