விவாகரத்து வாங்கும் நிலையில் விஜய் – சங்கீதா! அந்த ட்வீட் தான் காரணம்! 

Photo of author

By Sakthi

விவாகரத்து வாங்கும் நிலையில் விஜய் – சங்கீதா! அந்த ட்வீட் தான் காரணம்!
நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் விவாகரத்து வாங்கவுள்ளனர் என்று சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில் மொத்த பிரச்சனையும் முடிந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.
நடிகர் விஜய் அவர்கள் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பின் திறமையை வெளிகாட்டி தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை அதிகப்படுத்தி வருகின்றார். இவர் தற்பொழுது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
மேலும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு கட்சி மூலமாக உணவு வழங்குவது, குழந்தைகளுக்கு இலவச பயிலகம், நூலகம், இரத்த தானம், இலவச வீடு முதலான பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் விவாகரத்து பெறவுள்ளதாக சமீப காலமாகவே தகவல்கள் பரவி வருகின்றது.
அதற்கு காரணம் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா அவர்கள் கூறிய அந்த ஒரு தகவல் தான் என்று கூறப்படுகின்றது. பிரபல பின்னணி பாடகி சுசித்ரா அவர்கள் சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர் நடிகைகளின் இரகசியங்களை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றார்.
அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா பற்றியும் கூறியுள்ளார். அதாவது நடிகை திரிஷா அவர்கள் நடிகர் விஜய் அவர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். இதை பார்த்த பின்னணி பாடகி சுசித்ரா அவர்கள் “நடிகர் விஜய் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். இதனால் எம்ஜிஆர் அவர்களுக்கு அருகில் இருந்த ஜெயலலிதா அவர்களை போல நடிகர் விஜய்க்கு அருகில் திரிஷா இருப்பதாக நினைக்கிறார்.
நடிகர் விஜய் தற்பொழுது தனது மனைவி சங்கீதா மற்றும் அவருடைய குழந்தைகளுடன் இல்லை. எனவே இந்த சந்தர்ப்பத்தை நடிகை திரிஷா பயன்படுத்திக் கொள்கிறார்” என்று கூறியிருந்தார்.
பின்னணி பாடகி சுசித்ரா அவர்கள் கூறியதற்கு தகுந்தது போலவே நடிகர் விஜய் அவர்களுடன் அனைத்து நிகழ்சிகளுக்கும் வரும் அவர்களின் மனைவி சங்கீதா அவர்கள் சமீப காலமாக அவருடன் எந்த நிகழ்சிக்கும் வருவது கிடையாது. இதையடுத்து சங்கீதா அவர்கள் விஜய் அவர்களுடன் இணைந்து வராதது மேலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகை விஜய் அவர்களின் மனைவி சங்கீதா அவர்கள் எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “எனக்கு நீங்கள் எப்பொழுதும் ரொம்ப ஸ்பெசலானவர்” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இதன் மூலமாக விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து குறித்த மொத்த சந்தேகங்களுக்கும் வதந்திகளுக்கும் சங்கீதா முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த புகைப்படமும் போலி மற்றும் டுவிட்டர் கணக்கும் போலி என்று தற்பொழுது தெரியவந்துள்ளது.