பில்டப் அரசியலை விஜய் தவிர்க்க வேண்டும்.. தமிழ் தேசிய ஆய்வாளர் முகில் கருத்து!!

0
170
The main point of the Congress joining with Vijay.. MP's interview which caused a shock!!
The main point of the Congress joining with Vijay.. MP's interview which caused a shock!!

TVK: கரூர் பொதுக்கூட்ட விபத்துக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தமிழ் தேசிய ஆய்வாளர் முகில் தனது கருத்துக்களை கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் விஜய் மனம் தளராமல் மக்கள் சந்திப்புகளை மீண்டும் தொடர வேண்டும். இனி இத்தகைய கூட்டங்கள் திறந்த வெளி மைதானங்களில் நடத்தக் கூடாது என்றும், நேரடியாக பழகும் எளிமையான அரசியலை விஜய் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

விஜய்யை சுற்றியிருக்கும் சுயநல அரசியல் நபர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று கூறியதோடு, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யாதவர்கள் பதவியில் இருப்பதற்கே அர்த்தம் இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். கரூர் விபத்தில் விஜய் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்ட போது, இது திருஷ்டவசமான விபத்து விஜய் இதற்கு காரணம் இல்லை.

மின்சாரம் ஏன் துண்டிக்கப்பட்டது, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தாதது ஏன்? என்றும் அவர் கேட்டார். அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி சாராய மரணங்களின் போது முதல்வர் உடனே வரவில்லை ஆனால் இங்கு அரசியல் நோக்கத்திற்காக மட்டும் விரைவாக வந்துள்ளார் என்றார். மேலும் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, அவரை கைது செய்ய முடியாது.

அவ்வாறு அவரை கைது செய்தால் அது மக்கள் மனதில் அவரை மேலும் உயர்த்தும் எனக் கூறிய முகில், விஜய் உடனடியாக தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் விஜய் தனது பில்டப் அரசியலை தவிர்த்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் கேப்டன் விஜயகாந்த் போல எளிய மக்களுடன் மக்களாக பழகும் பண்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார். விஜயகாந்தின் நிலைமை விஜய்க்கு வரக்கூடாது என்று எச்சரித்தார். மேலும் கரூர் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை விஜய் மிகவும் கவனத்துடன் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

Previous articleகரூர் இழப்புக்கு விஜய் தான் காரணம்.. அமைச்சர் துரைமுருகன் நச் பதில்!!
Next articleநீதிபதி குறித்த தவறான விமர்சனம்.. சிறையில் அடைக்கப்பட்ட தவெக நிர்வாகிகள்!!