உள்ளாட்சி தேர்தலில் விஜய் அணியினர் பெற்ற அபார வெற்றி!

Photo of author

By Hasini

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அணியினர் பெற்ற அபார வெற்றி!

தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களை பிரித்ததன் காரணமாக தற்போது தமிழகமெங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில் விஜய்யின் ரசிகர்கள் போட்டி போட்டனர்.

அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுவதன் காரணமாக இன்னும் சிலர் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 52 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.