BJP TVK: புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய்யும், இந்திய அளவில் முதன்மை கட்சியாக அறியப்படும் பாஜகவும் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் நிலைபெற முடியாமல் தவிக்கும் பாஜக இந்த முறை பீகாரில் பெற்ற வெற்றியை அடிப்படியாக வைத்து காலூன்றலாம் என்ற நோக்கில் உள்ளது. இதற்கு அதிமுக கூட்டணி மட்டுமே போதாது என்பதை அறிந்த பாஜக, விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்டு அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்ததை கண் கூடாக பார்க்க முடிந்தது.
ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று அறிவித்து விட்டதால், அதனுடன் கூட்டணி சேர்ந்தால், அது தனது அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் பின்னடைவு என்று விஜய் யோசித்தார். ஆனாலும் பாஜக அவரை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை இதுவரை கைவிடுவதாக தெரியவில்லை. பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைத்து இடத்திலும் இன்னும் ஒரு மாதத்தில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யை சேர்க்க முயற்சிக்கும் பாஜக தலைமை எப்போது விஜய்யை நேரில் சந்திக்கும் என்ற கேள்வியை அனைவரும் எழுப்பி வந்தனர்.
தவெக தலைவர் விஜய் அமித்ஷாவை நேரில் சந்திப்பாரா? என்று பாஜகவின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பதிலளித்த அவர், யாரை யார் எப்போது பார்க்க வேண்டும் என்பதை டெல்லி மேலிடம் சரியான நேரத்தில் முடிவு செய்யும் என்று கூறி முடித்தார். இவர்களின் சந்திப்பை வானதி சீனிவாசன் மறுக்காததால், இவரின் கருத்து கூடிய விரைவில் அமித்ஷா-விஜய் சந்திப்பு நிகழும் என்பதையும், பாஜக-தவெக கூட்டணி அமைக்கப்படும் என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த செய்தி பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர்.

