ADMK TVK AMMK: 2026 யில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் வேகமெடுத்துள்ள நிலையில், மக்களை சந்தித்து தங்கள் கட்சியை நிலை நிறுத்துவதிலும் திராவிட கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதிமுகவின் வருகையாலும், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் கூறி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகினார். இவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது நிறைவேறவில்லை.
இபிஎஸ்யை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளரக இருந்தாலும் கூட்டணியில் இணைவோம் என்று திடமாக கூறி வந்தார். ஆனால் இப்போது வரை இபிஎஸ் மாற்றப்படாததால் ஆத்திரமடைந்த தினகரன், தவெகவில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கணிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் ஆண்டிபட்டி தொகுதியை அமமுகவிற்கு எந்த கட்சி ஒதுக்குகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம். இல்லையென்றால் தனித்து நின்று களம் காணுவோம் என்று தினகரன் கூறியிருக்கிறார். அதிமுக வாக்குகளை விஜய் குறி வைப்பதாலும், அதில் சில பகுதிகளை தினகரன் தன் கையில் வைத்துள்ளதாலும் தினகரனின் கோரிக்கைக்கு விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று பலரும் கூறுகின்றனர்.
மேலும் ஆண்டிபட்டி தொகுதியில் ஏற்கனவே ஒரு முறை தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியை அவருக்கு ஒதுக்குவதன் மூலம், தவெக அங்கு சுலபமாக நிலை பெற முடியும் என விஜய் நினைக்கிறார். இதன் காரணமாக அமமுக-தவெக கூட்டணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினைகளால் அக்கட்சி பலமிழந்துள்ள நிலையில், தற்போது தினகரனும் விஜய் கூட்டணியில் சேர்ந்தால், இபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தை கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுவார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.