TVK BJP ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இம்முறை அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக திராவிட கட்சிளுக்கு இணையாக தவெக வளர்ந்து வருகிறது. விஜய்யின் இந்த அசுர வளர்ச்சி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவிற்கும், ஆட்சி கட்டிலில் இருக்கும் திமுகவிற்கும், தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜகவிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதன் காரணமாகவும், விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி போன்ற நிபந்தனைகளால் அதிமுக- தவெக கூட்டணி இழுபறியிலேயே இருக்கிறது. பாஜகவும் விஜயை கூட்டணியில் சேர்க்க எவ்வளவு முயற்சித்தும் அது கை கூடவில்லை. இதனால் விஜய் நல் வாய்ப்பை தவற விடுகிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர். அந்த வகையில் தற்போது புதிதாக பாஜக கூட்டணியில் தொடர்ந்து வரும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் விஜய் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்காதது குறித்து அவரது கருத்தை கூறியுள்ளார்.
விஜய் இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அறிய வாய்ப்பை விஜய் தவற விடுகிறார் என்ற பயம் எனக்கு உள்ளது என்று கூறிய அவர், ஒரு முறை வாய்ப்பை தவற விட்டால் மீண்டும் கிடைப்பது கடினம். விஜய் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பாஜக விஜயை பயமுறுத்தும் தோணியில் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.