TVK: புதிதாக கட்சி தொடங்கிய விஜய் முதன் முதலில் 2026 யில் தேர்தலை சந்திக்க உள்ளார். தவெகவின் அரசியல் எதிரி திமுக என்று எல்லா இடத்திலும் தவெக தலைவரும், தொண்டர்களும் கூறி வருகின்றனர். கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் தவெகவுக்கான வரவேற்பு பெருமளவில் உள்ளது. இதனால் மாநில கட்சிகள் தொடங்கி, தேசிய கட்சிகள் வரை விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயன்றன. ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் நான் தான் என்ற முடிவில் தெளிவாக இருந்தார். இதனால் அதிமுக என்னசெய்வதென்று தெரியாமல் திணறியது. விஜய்யின் இந்த பிடிவாதம் காங்கிரஸ் இருக்கும் தைரியத்தில் தான் என பலரும் கூறி வந்தனர்.
விஜய் கட்சி துவங்குவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர்களுடன் நல்ல நட்புறவில் இருந்து வந்தார். இதனால் இவர்கள் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு தொகுதி பங்கீடு குறித்து திமுகவிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்பது உறுதியானது. இதனால் விஜய் மிகவும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸை நம்பி அதிமுக கூட்டணியை ஒதுக்கிய விஜய், தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளதாக தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
விஜய் திமுகவை கடுமையாக எதிர்த்து வருவதால், இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம். இல்லையென்றால் அவரின் அரசியல் வாழ்க்கையை திமுக அழித்து விடும். இப்படி இருக்கும் சமயத்தில் முதல் தேர்தலில் தனித்து நின்றால் வெல்ல முடியாது என்பதை அறிந்த விஜய், தனது முதல்வர் வேட்பாளர் பதவியிலிருந்து இறங்கி வந்து அதிமுக உடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. எக்காரணம் கொண்டும் இபிஎஸ் ஜெயிக்க கூடாது என்று தவெகவில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.

