சுற்றி பயணத்திற்கு தயராகும் தவெக தலைவர் விஜய்; அனல் பறக்கும் தேர்தல் களம்!!

0
29

நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி தனது கட்சியை தயார் படுத்தி வருகின்றார்.

தற்போது தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளார். பூத் கமிட்டி லெவல் வரை கட்சியை வலுப்படுத்த பூத் கமிட்டி ஏஜென்ட் மாநாட்டை ஐந்து முக்கிய நகரங்களில் நடத்த தற்போது தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. கோவையில் வெற்றிகரமாக பூத் கமிட்டி மாநாடு நடந்து முடிந்த நிலையில் அதனை தொடர்ந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களில் விரைவில் மாநாடு நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தற்போது ஜனநாயகன் படம் சூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் தனது அரசியல் சுற்றுப்பயணம் குறித்து விஜய் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றார். விஜய் அரசியல் சுற்றுப்பயணத்திற்கு பிறகு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை ஜூலை மாதம் தொடங்கலாம் என தவெக வட்டாரத்தில் கூறப்படுகின்றது. 42 நாட்கள் தொடர் சுற்றுப்பயணத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த மக்களை விஜய் சந்திக்க இருக்கின்றார். அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகிகளுக்கு ஒரு சில அட்வைஸுகளை தலைவர் விஜய் வழங்கியுள்ளார்.

மேலும் தவெக குறித்து விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். வரும் 2026 தேர்தலை குறி வைத்து முழுவதும் தேர்தலை நோக்கி இயங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Previous articleஉலகையே திரும்பி பார்க்க வைக்கும் அசத்தல் கன்டுபிடிப்பு!! நீரில் போட்டால் கரையும் பிளாஸ்டிக்!!
Next articleஜூன் மாதத்தில் 2 நாட்கள் மது கடைகள் மூடல்; எங்கு தெரியுமா!