
TVK BJP: கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் ஏற்பட்ட துயரம், தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தனி நபர் ஆணையம் அமைக்க பின்னர் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் விஜய் தரப்போ சிறப்பு புலனாய்வு குழுவில் நம்பிக்கை இல்லையென கூறி சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தது. இதனால் உச்ச நீதிமன்றம் இதனை சிபிஐ கைக்கு மாற்றியது. இதனை தொடர்ந்து விஜய் தனது சமூக வலைத் தள பக்கதில் நீதி வெல்லும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் விஜய் இதற்கு முன் ஒரு முறை SIT இருக்க CBI எதற்கு என்று ஒரு போராட்டத்தில் கூறியிருந்தார். ஆனால் இப்போது அவர் இவ்வாறு கூறியிருப்பது பாஜக கூட்டணியில் அவர் இணைந்து விட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் பின்னால் பாஜக உள்ளது என்பதையும் இது தெளிவுப்படுத்துகிறது. விஜய் தனது அனைத்து பிரச்சாரங்களிலும் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார்.
இதனால் இவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்று எதிர்பார்த்த சமயத்தில், கரூர் விவகாரத்திலிருந்து தப்பிப்பதற்காக பாஜகவுடன் சேர்ந்துள்ளார் என்றும் ஒரு தரப்பு கூறி வர, இன்னொரு தரப்பு திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக, அதிமுக, இருப்பதால் தவெகஉடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் திமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர கூடாது என்பதற்காக கொள்கை எதிரி என்று கூறி வந்த பாஜக உடன் விஜய் கூட்டணி அமைக்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.