TVK ADMK DMK: தமிழக அரசியலில் சமீபகாலமாக நடிகர் விஜய் உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் புதிய அலைகளை கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக திராவிட கட்சியான அதிமுக எதிர்காலத்தில் விஜய்யை தங்களது கூட்டணியில் சேர்க்கும் வாய்ப்பு குறித்து நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், விஜய்யின் அண்மை நடவடிக்கைகள் அவரது அரசியல் பாதை தனித்துவமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதனுடன் இணையும் வாய்ப்பு இல்லை.
கரூரில் நடந்த பிரச்சாரத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு தவெகவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து வரும் நவம்பர் 5ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக விஜய் அறிவித்திருப்பது அவரது கட்சி மீண்டும் செயலில் நுழைவதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. இதேசமயம், அதிமுக அணிகள் விஜயுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளை ஆராய்ந்த நிலையில், விஜய் தனது கட்சியின் சுய நிலைமைக்கும், கொள்கை திசைக்கும் முக்கியத்துவம் தருவதாக கூறியுள்ளார். அவரை சுற்றியுள்ள நபர்கள் விஜய் எந்தக் கட்சியுடனும் சரணடைய மாட்டார்.
மக்கள் நலனே முதன்மை, அதற்காகவே தனியாக போராட விரும்புகிறார் என்று தெரிவிக்கின்றன. அவர் அதிமுக கூட்டணியில் இணைந்தால் தவெக இதுவரை கவர்ந்துள்ள இளைஞர்களின் வாக்குகள் குறையும் என அவர் கருதுவதாகவும் தகவல் வெளியாகின்றன. இதனால், வரவிருக்கும் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனியாக களமிறங்கும் சாத்தியம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசியலில் மூன்றாவது முக்கிய சக்தியாக உருவெடுக்க முயலும் விஜய்யின் அரசியல் பயணம் புதிய பரிமாணத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

