நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பததில்லை.
தான் கட்சி துவங்கிவிட்டதால் அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தன்னை தேடி வருவார்கள். தனது தலைமியில்தான் கூட்டணி விஜய் நினைத்தார். கூட்டணிக்காக அதிமுக அவரை அணுகியபோது நிறைய சீட்களும், துணை முதலவர் பதவியும் விஜய் தரப்பில் கேட்டதால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக பக்கம் போய்விட்டார் என்கிறார்கள்..
இதை விஜயே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், சீமான் கண்டிப்பாக தன்னுடன் கூட்டணிக்கு வரமாட்டார். அதோடு, தனித்துப்போட்டி எனவும் அவர் அறிவித்துவிட்டார். எனவே, யாருடன் கூட்டணி அமைப்பது என்கிற குழபத்தில் விஜய் இருக்கிறார் என்கிறார்கள். இந்நிலையில், வருகிற டிசம்பர் மாதத்திற்கு பின்னரே யாருடன் கூட்டணி என விஜய் முடிவெடுக்கவுள்ளாராம்.
ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்தபின் விஜய் மக்களை சந்திக்க பயணம் செய்கிறார் எனவும், அது முடிந்த பின்னரே கூட்டணி முடிவு எனவும் செய்திகள் கசிந்திருக்கிறது. அதேநேரம், விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி என்பதில் தவெக உறுதியாக இருக்கிறதாம்.