அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்? உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த வந்த மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சுமார் 160 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் இதில் 129 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியானது.

வெற்றி பெற்ற நபர்கள் நடிகர் விஜயை சந்திப்பதற்காக பனையூரில் இருக்கக்கூடிய விஜய் இல்லத்திற்கு திங்கள்கிழமை அன்று வருகை தந்தார்கள். அவர்கள் எல்லோரையும் சந்தித்த நடிகர் விஜய் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டு நிறைவேற்றித் தரவேண்டும் எனவும், இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், விஜய் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், அவர் வெளியிட்ட இருக்கக்கூடிய அறிக்கையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு தளபதி அவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியிருக்கிறார்.

வெற்றி பெற்ற எங்களுடைய இயக்கத்தைச் சார்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள் இவர்கள் எல்லோரையும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை தீர்த்து நல்வாழ்வு பணியினை விஜய் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் செவ்வனே செயல்படுத்தி பொதுமக்களின் பணியை தொடர்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறியிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.

இந்த தேர்தலில் இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள், 12 ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்கள், உட்பட 129 நபர்கள் வெற்றிப்பெற்றார்கள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், எந்தெந்த மாவட்டத்தில் எந்த பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை பட்டியல் மூலமாக வெளியிட்டு நன்றி தெரிவித்து இருக்கிறது விஜய் மக்கள் இயக்கம். குழு புகைப்படத்தில் வெற்றி பெற்றவர்களுடன் ஒரு ஓரத்தில் அமர்ந்து போஸ் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். இந்த புகைப்படம் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது, அதோடு முதன் முதலாக விஜய் மக்கள் இயக்கத்தினர் சந்தித்த இந்த தேர்தல் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Comment