TVK BJP: விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு சரிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது கரூர் சம்பவம். இது அரசியல் தலைவனை பார்க்க வந்த கூட்டம் அல்ல. நடிகரை காண வந்த கூட்டம் என்றும் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக திமுக தொண்டர்கள் பலரும் தவெகவை விமர்சிக்க, தவெக தொண்டர்கள் திமுகவை விமர்சித்து வந்தனர். இதை விசாரிக்க தனி நபர் குழுவும் அமைக்கப்பட்டது.
இதனை ஏற்காத பாஜக 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, என்ன நடந்தது என்று விசாரித்து வருகிறது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று விமர்சித்து வந்த நிலையில், பாஜகவின் இந்த செயல் விமர்சனத்துக்குள்ளானது. இது குறித்து விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காதது அந்த விமர்சனத்தை மேலும் உறுதிப்படுத்தியது.
ஆனாலும் தவெக நிர்வாகிகள் சிலர் விஜய்யிக்கு பாஜகவுடன் கூட்டணி அமைக்க சிறிதும் விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தவெகவின் தீவிர ஆதரவாளரான போக்கிரி விக்டர் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், விஜய் செத்தாலும் பாஜக கூட்டணியில் சேர மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் விஜய்க்காக செய்த உதவி அனைத்தும் வீண் என்று, பாஜக நினைப்பதாக தகவல் கசிந்துள்ளது. விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியிலேயே அனைத்தையும் செய்து வந்த பாஜகவிற்கு இது பேரிடியாக உள்ளது என்றும், இதனால் இந்த குழுவின் செயல்பாடுகள் கூடிய விரைவில் நிறுத்தப்படும் என்று பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.