அதிர்ச்சி என்ன ஆனது விஜயகாந்துக்கு? மருத்துவமனையில் அனுமதி!

Photo of author

By Sakthi

அதிர்ச்சி என்ன ஆனது விஜயகாந்துக்கு? மருத்துவமனையில் அனுமதி!

Sakthi

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்விலிருந்து வந்ததால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். மேலும் மேடைகளிலும் பெரிதாக உரையாற்றுவதில்லை. கட்சி நடவடிக்கைகளை அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான் கவனித்துக் கொண்டு வருகிறார்கள்.

விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் இருக்கின்ற சூழ்நிலையில், அந்த கட்சியின் பொருளாளர் பதவியை தன் கையில் எடுத்துக் கொண்டு அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சி பணிகளை கவனித்து வருகிறார்.

நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் கூட விஜயகாந்த் போட்டியிடவில்லை விஜயகாந்த் தன்னுடைய குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

https://newstm.in/static/c1e/client/77058/uploaded/567e9e2de9aa2084c57673ca9063a075.webp

ஆகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக செய்யும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சை முடிவற்று ஓரிரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிகவின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிக விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.