DMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு பரபரப்பாக உள்ளது. மக்களும் தேர்தலை எதிர்நோக்கி உள்ள சமயத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலையும் தன் வசப்படுத்த வேண்டுமென பல முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளும், பழைய எதிரியான அதிமுகவும், புதிய எதிரியான தவெகவும் அதனை சிதைக்க முயன்று வருகின்றன. அதிமுகவையும், கூட்டணி கட்சிகளையும் கூட திமுக சமாளித்து விடும். ஆனால் தவெகவை சமாளிப்பது அதற்கு பெரும்பாடாக உள்ளது.
திமுக, தவெகவை எதிரியாக ஏற்று கொண்டதே இதற்கு உதாரணம். இந்நிலையில் விஜய்க்கு மேலும் பலத்தை கூட்டும் வகையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். இன்னும் சில அமைச்சர்களை கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தவெகவுக்கு பலம் கூடி கொண்டே செல்வது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இவ்வாறான நிலையில் தான் விஜய்யின், முன்னாள் மேனேஜர் பி.டி. செல்வகுமார் திமுகவில் இணைந்துள்ளார்.
இவர் புலி படத்தின் இயக்குனராகவும், புறா, வில்லு, போக்கிரி படத்தின் பிஆர்ஓ-வாகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் விஜய்க்கு மிகவும் நெருக்கம் என்று திரைதுறை வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படி இருக்க இவர் ஏன் திமுகவில் இணைந்தார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. விஜய்யின் நண்பர் என்பதால், அவரை எதிர்ப்பதற்காக பி.டி. செல்வகுமாருக்கு உயர்ந்த பதவி தற்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.

