TVK CONGRESS: பீகாரில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தங்களது பலத்தை காட்ட வேண்டுமென ஆலோசித்து வருகிறது. சில காலமாகவே திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் அதன் தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுகவோ பீகாரில் காங்கிரஸ் தோல்வியடைந்தன் காரணமாகவும், காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லையென்ற காரணத்தினாலும் அதன் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.
இவர்கள் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலையில், திமுகவும் ஒரு தனி குழு அமைத்த பிறகு தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுன் கோரிக்கைகளை நிறைவேற்ற திமுகவிற்கு விருப்பமில்லை என்பதை அறிந்த, காங்கிரசின் தலைவர்கள் விஜய்யை பகடை காயாக பயன்படுத்த நினைத்தனர். மற்றும் ஒரு தரப்பு விஜய் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வந்தன. விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே அவருக்கும் காங்கிரசுக்கும் நல்ல நட்புறவு இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதனை அந்த கட்சியை சேர்ந்த ஜோதிமணியும் கூறியுள்ளார்.
மேலும் ராகுலின் நெருங்கிய நண்பரும், காங்கிரசின் முக்கிய முகமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இது பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்த நிலையில், நேற்று நடந்த சுப நிகழ்ச்சி ஒன்றில் தமிழக காங்கிரசின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமியும், தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரும் நேரில் சந்தித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒன்றாக காரில் பயணித்தால், அப்போது தவெக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக தவெக தலைவர் விஜயும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விரைவில் சந்திப்பார்கள் என்று பலரும் கூறுகின்றனர்.

