TVK: செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த கரூர் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 41 உயிர்கள் பறிபோன நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி, ஸ்டாலின், விஜய் என பலரும் நிவாரணம் வழங்கினார்கள். இந்நிலையில் திமுக, தவெக என மாறி மாறி விமர்சனங்கள் எழுந்த நிலையில், திமுக தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது.
பல்வேறு தரப்பினரும் தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்தது தான் காரணம் என்றும், பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் சென்றது ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு அழகில்லை என்றும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து நீதி மன்றமும் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லையென்றும், இது எந்த வகையான கட்சி என்றும் கூறி கண்டனங்களை முன் வைத்திருந்தது. ஆனால் இபிஎஸ், அண்ணாமலை, சீமான், ஓபிஎஸ், போன்றோர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ராஜா கரூர் விவகாரத்தில் விஜய் மீது என்ன தவறு இருக்கிறது, பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது ஒரு தவறா? அவர் வரும் வழியில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்திருக்கலாம், அதனால் தாமதமாகி இருக்கும். இதை ஒரு குறை என்று கூறுவது ஏற்கதக்கது அல்ல. எனக்கு விஜய் மீது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த விவகாரத்தில் அவருக்கு துணையாக நிற்பேன் என்றும் கூறினார். அவர் மீது தவறில்லை என்பது கூடிய விரைவில் நிரூபிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.