TVK BJP CONGRESS: கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக விஜய் நேற்று டெல்லி சென்றார். இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய்யை டெல்லிக்கு வரவழைத்து அரசியல் வலையில் வீழ்த்துவதற்கான வேலையை செய்ய பாஜக முயற்சிகிறது என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். தமிழக தேர்தல் என்றாலே அதில் பல்வேறு காரசாரமான விவாதங்கள் நிகழும். இதனை மேலும் மெருகேற்றும் வகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இவர் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே இவருக்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது. இதனை தொடர்ந்து மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்ட விஜய் 5 இடங்களில் அதனை சிறப்பாக செய்து முடித்தார்.
6 வதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்ததுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தனர். இந்த சம்பவம் திமுகவின் கோட்டையாக கருதப்படும் கரூரில் நடந்ததால் இது திமுகவின் சதி என்று தவெக கூற, திமுகவை சேர்ந்தவர்களோ இது தவெகவின் அரசியல் அறியாமை என்று கூறி வந்தனர். இதனால் இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் தனி நபர் குழு அமைக்கப்பட்டது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபிஐ விசாரணையை கோரியது. சிபிஐ மத்திய அரசின் கட்டுபாட்டில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கரூர் சம்பவம் சிபிஐ ஒப்டைக்கப்பட்டதை பயன்படுத்த நினைத்த பாஜக, விஜய்யை கூட்டணிக்கு அழைக்க, விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் அவர்களுடன் கூட்டணி அமைக்க மறுத்து விட்டார்.
இவ்வாறான சமயத்தில் தான், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விசாரித்த சிபிஐ நேற்று கட்சி தலைவர் விஜய்யிடமும் விசாரணை நடத்தியது. நேற்று காலை 6 மணியளவில் டெல்லி புறப்பட்ட விஜய்யிடம் சுமார் சில மணி நேரம் கேள்விகள் எழுப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விஜய் சிங்கத்தின் வாயில் சிக்கியுள்ளார். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார். மேலும், விஜய்யை டெல்லிக்கு வரவழைத்து வரை கூட்டணியில் சேர்ப்பது தான் பாஜகவின் திட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.