விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எதிரொலி: புதிய துணை முதல்வர் பதவிக்கு தயாராகும் உதயநிதி!!
விக்கிரவாண்டி இடைதேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.அங்கு தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடை பெற உள்ளது.மேலும் வாக்குப் பதிவு முடிவுகள் ஜூலை 13-ம் தேதி அறிவிக்கப்படும்.இன்னும் ஓட்டு போடுவதற்கு குறைந்த நாட்களே உள்ளன.இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக,முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் Video வெளியிட்டுள்ளார்.அதில் உங்கள் தொகுதி நன்மைக்கு பாடுபடும் நமது தோழர் அன்னியூர் சிவாவை,உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியடைய செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பிற கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்த பிறகு இரண்டு வாரங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்வார் என அரசுக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் உள்ள நிறுவங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்கும் வகையில் இந்த பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இடைத்தேர்தலுக்கு பின் தமிழக அமைச்சரவையில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படப் போகிறது.அதாவது இப்பொழுது இருக்கும் சீனியர் அமைச்சர்கள் சில பேர் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால் அமைச்சரவையை கலைத்து புதிய நபர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என தகவல்கள் கசிந்து உள்ளன.மேலும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக துணை முதல்வர் பணி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.