விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர்
கடந்த ஜூலை பத்தாம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூலை13) தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் முன்னிலை பெற்று அவர்கள் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இந்த இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் இருந்து அதிமுக விலகிய நிலையில் திமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் போட்டியிட முடிவு செய்தனர்.
அதன்படி திமுக கட்சி சார்பாக அன்னியூர் சிவா அவர்களும், பாமக சார்பாக சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து பிரச்சாரமும் நடந்து முடிந்த நிலையில் ஜூலை 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இன்று(ஜூலை13) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.
13 வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி 83430 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் இருக்கிறார். அதனையடுத்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 36341 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபிநயா 6767 வாக்குகள் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.