விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு.. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்குமா அதிமுக!!
தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலை எதிர்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 14 தேதியுடன் முடிந்து விட்டது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் (ஜூன் 26) நேற்றுடன் முடிவடைந்து விட்டது . மேலும் வாக்குப்பதிவு வரும் ஜூலை 10 தேதி அன்று நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவாவும்,பா.ம.க சார்பில் சி. அன்புமணியும் மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநாயாவும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள், தேர்தலில் போட்டியிடாத அதிமுக இத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திள்ளது.மேலும் சீமான் கூறுகையில், இரு கட்சிகளுக்கும் பொது எதிரி திமுக எனவும் குறிப்பிட்டுள்ளார்.அதிமுக யாருக்கு ஆதரவு தரப்போகிறது என்பது தெரியவில்லை.அதுமட்டுமில்லாமல் அதிமுக மறைமுகமாக பாமகவுக்கு தங்களது ஆதரவை தந்துள்ளது என ஆளும் கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தலில் மற்ற இரு கட்சிகளும் திமுகவை வீழ்த்த வேண்டும் என பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்னர்.இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்கு செலுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.