ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம்,
காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம்,போன்ற நாட்களில் கிராம ஊராட்சிகளில்,கிராமசபை நடைபெறும்.அந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு,திட்ட பணிகள், மற்றும் மக்களின் கோரிக்கைகள்,போன்றவை கலந்தாலோசித்து ஒப்புதல் பெறப்படும்.
கொரோனாத் தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது.சமூக இடைவெளி பின்பற்றுவதன் காரணமாக,சுதந்திர தினத்தன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் யாரும் கூட்டம் கூட கூடாது என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது பொது கிராமசபை கூட்டம் நடத்தினால் அந்த ஊராட்சியில்லுள்ள 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட வேண்டிய வாய்ப்பு இருக்கும்.இதனால் இந்த ஆண்டு நடைபெவிருந்த கிராம சபை கூட்டம் பொதுமுடக்கம் காரணமாக நடைபெறாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.