நம் எல்லையில் சீனா உருவாக்கிய கிராமங்கள்! அதுவும் இத்தனையா? செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்!
இந்திய அளவில் சீன ராணுவம் முன்னேற்றம் அடைவது குறித்து முன்னணி செயற்கைக்கோள் படம் நிபுணர் ஒருவர் புதிய செயற்கைக்கோள் படங்களை தற்போது ட்வீட் செய்துள்ளார். மேலும் அதை வெளியிட்டு உள்ளார். கடந்த இரண்டு வருட காலமாகவே கொரோனா தொற்று பரவிய காலத்திலிருந்தே நம் நாட்டு எல்லைப் பகுதிகளில் சீன ராணுவமும், நமது ராணுவமும் சில இடங்களுக்கு சொந்தம் கொண்டாடி சண்டையிட்டு வருவதை நமக்கு தெரிந்ததே.
நமக்கு சொந்தமான இடங்களை எல்லாம் அதற்கு சொந்தம் என வம்பிழுப்பதற்காக உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இன்டெல் ஆய்வகத்தின் உலகளாவிய ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் புகைப்படம் புவிசார் அரசியல் புலனாய்வு நிபுணர்களின் ஆழமான ஆய்வுகளை கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.
அதில் சீனா கடந்த ஆண்டு பூடான் பிரதேசத்தில் 4 கிராமங்களை உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பல புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது கேள்விப்பட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய நிலம் டோக்லாம் பீடபூமிக்கு மிக அருகில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியாவும், சீனாவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதன் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையேயான சர்ச்சை பகுதிகளில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை சீனா மீண்டும் தொடங்க ஆரம்பித்து.
இந்திய பாதுகாப்புகளையும் தவிர்த்தது. பூடான் நிலபரப்பில் உள்ள புதிய கட்டுமானம் இந்தியாவிற்கு கவலை அளிப்பதாக உள்ளது. ஏனெனில் இந்தியா வரலாற்று ரீதியாக பூடானுக்கு அதன் ஆயுதப் படைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது.
பூடான் தனது நில எல்லைகளை மறுபரிசீலனை செய்யத் தொடர்ந்து சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த கிராமங்கள் மே 2020 மற்றும் நவம்பர் 2021 க்கு இடையில் கட்டப்பட்டுள்ளது என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
https://pbs.twimg.com/media/FEZmgVxVEAULn3G?format=jpg&name=360×360
https://twitter.com/detresfa_?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1460970809871134727%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2F2021%2F11%2F18111422%2FChinese-Land-Grab-On-Bhutanese-Territory-4-Villages.vpf