வில்வ மரம் வளர்ப்பதில் இவ்வளவு நன்மையா?

0
195

பெரும்பாலான சிவன் கோவில்களில் வில்வ மரம் இருப்பதை அனைவராலும் பார்க்க முடியும். அதனை தரிசனம் செய்து வந்தாலே வாழ்வில் ஏற்படும் மிகப்பெரிய துன்பங்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் அதே வில்வ மரத்தை நானே வளர்த்தோமானால் நாம் செய்த பாவங்கள், நாம் பெற்ற சாபங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்மீகப் பெரியோர்களின் கருத்து. தற்போது இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.

வில்வ விதைகளை நல்ல சுபநாளில் வாங்கி அதனை ஒரு மண் டூட்டியில் போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும் உரமாக நீரில் பசுஞ்சாணம் சிறிது கலந்து தெளிக்க வேண்டும் இதனை தொடர்ந்து சில நாட்களில் வில்வ கன்று விதையிலிருந்து துளிர்விடும்.

விதையை நத்ததில் இருந்து சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை நாள்தோறும் ஜபித்து வர வேண்டும்.

வில்வமரம் ஒரு அடி வளர்ந்ததும் அவரவர் கூறிய ஜென்ம நட்சத்திர நாளில் ஏதாவது ஒரு சிவன் கோவிலில் அந்த வில்வ கன்றை நட்டு வைத்து நன்கு பராமரிக்க ஆட்களை நியமனம் செய்யலாம்.

வில்வமரம் 6 அடிக்கு மேல் வளர்ந்து விட்டால் அது தானாகவே தழைக்கும். நாம் வளர்த்த மரத்தின் இலைகளைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அனைத்து தீய பலன்களும் விலகிச் செல்லும். தலைமுறை தாண்டிய சாபமும், பாவமும் நீங்கும் என்பது ஐதீகம்.

சிவன் கோவில்களில் வில்வத்தந்தை வைக்க முடியாவிட்டால் கோவில் அருகே வைத்து வளர்க்கலாம். வில்வ மரத்தை வளம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு நிகரானது.

Previous articleஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா:? இந்த ஒரு ஜூஸ் போதும்!
Next articleரயில்முன் தள்ளிவிட்டு இளம் பெண் கொலை:! ஒருதலைக் காதலால் ஏற்பட்ட கொடூர விபரீதம்!