அவதூறு கூறிய நடிகை மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்! ஜாமீன் தள்ளுபடி!

Photo of author

By Hasini

அவதூறு கூறிய நடிகை மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்! ஜாமீன் தள்ளுபடி!

நடிகை மீரா மீதும் மாடல் துறையில் இருந்து நடிகை ஆனார். அதன் பின் பிக்பாஸ் ஷோவின் மூலமும் கொஞ்சம் பரிச்சயமானார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத ஏக்கத்தில் பல பேர் மீது அவதூறு கருத்துக்களை தேவை இல்லாமல் பரப்பு வந்தார். வீண் பழியும் சுமத்தி வந்தார். அப்போதும் பிரபலமாகாததால், அவரே விதவிதமாக வீடியோ எடுத்து வெளியிட்டு வந்தார்.

அப்போதும் அவரை யாருமே கண்டு கொள்ளாத காரணத்தினால், பட்டியலின மக்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும் அவதூறாக பேசிய காரணத்தினால், அவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது. பேசியதெல்லாம் பேசிவிட்டு தலைமறைவாக இருந்த அவரை போலீசார் வலைவீசி பிடித்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடப் பட்டது. இருப்பினும் அவரும் அவரது நண்பரும் ஜாமீன் கேட்டு மனு அளித்து உள்ளனர்.

நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்களை பற்றி அவதூறு கருத்துக்களை யூடிபில் வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நடிகையும் அவரது நண்பரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் நடிகை மீரா மீது வழக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அந்த நடிகை மற்றும் அவரது நண்பர் ஜாமின் மனுக்களை தள்ளுபடியும் செய்தது. சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தவும் வகையிலும், மோதலை தூண்டும் வகையிலும் உள்ளது என்றும்,  தொடர்ந்து இப்படியே பேசுகிறார் என்றும், அவர் இதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்றும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் புலன்விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால், ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.