வைரலான திருமண அழைப்பிதழ்! ஹை லைட்டே இதுதான்!

Photo of author

By Hasini

வைரலான திருமண அழைப்பிதழ்! ஹை லைட்டே இதுதான்!

பெண்களில் தனியாக அரசியலில் ஆட்சி செய்தவர்கள் இரண்டே பேர் தான் ஒருவர் தமிழகத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதா, வங்க தேசத்தில் மம்தா பானர்ஜி, ஆனால் தற்போது புரட்சி தலைவி உயிரோடு இல்லை.

வங்க தேசத்து சிங்கம் என்று கூட பலரால் அழைக்கப்படுகிறார் மம்தா பானர்ஜி. ஆனால் தற்போது இவரது பெயரை வைத்து ஒரு வைரல் வீடியோ இணையத்தில் கலக்கி வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன் தன் கட்சியின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக, தன் மூன்று மகன்களுக்கும் கட்சியை சார்ந்தே பெயர் வைத்துள்ளார். தன் முதல் மகனுக்கு கம்யூனிசம் எனவும், ரஷ்யத் தலைவர் லெனின் மீது கொண்ட பற்று காரணமாக 2-வது மகனுக்கு லெனினிசம் என்றும், மூன்றாவது மகனுக்கு சோசலிசம் எனவும்  பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில், மூன்றாவது மகன் சோசலிசத்திற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

அங்கு தான் பெரும் ட்விஸ்ட் காத்திருந்தது. மணப்பெண்ணின் குடும்பமோ, பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பம் என்பதால், பழனிசாமி நீலாம்பாள் தம்பதியினர், மேற்கு வங்கத்தின் சிங்க பெண் என்றழைக்கப்படும் மம்தா பானர்ஜியின் பெயரை தங்கள் மகளுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார்.

தற்போது மம்தா பானர்ஜிக்கும், சோசலிசத்திற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கம்யூனிசத்தைக் கடுமையாக விமர்சித்து, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமாடுகிறார்.

ஆனால் சேலத்திலோ கம்யூனிஸ்ட் குடும்பமான, மோகனின் குடும்பத்தில் ஐக்கியமாக உள்ளார் இந்த மம்தா பானர்ஜி. எனவே இந்த  நிகழ்வு சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.