விராட் கோலி தொடர்பாக எழுந்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ!

0
256

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ஒரு நாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதால் அவர் அதிருப்தியுடன் உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

அதோடு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் இடையே மோதல் போக்கு இருப்பதன் காரணமாக, டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியதாகவும், அதேபோல ஒரு நாள் போட்டியிலிருந்து தற்போது விராட் கோலி விலக இருப்பதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

இவ்வாறான நிலையில், இந்திய அணிக்குள் சலசலப்பு உண்டானது. இந்த அணி வீரர்கள் கோஷ்டி மோதல் இன்றி விளையாடுவார்களா? என்ற கேள்வியும் பூதாகரமாக எழுந்தது இந்நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இது விராட்கோலி தொடர்பான யூகத்தின் அடிப்படையிலான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து இருக்கிறது.

Previous article15-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
Next articleஇந்தியாவில் அதிவேகமாக பரவும் புதிய வகை நோய் தொற்று!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here