அனைத்து வீரர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரத்தான் செய்யும்! கோலி தொடர்பாக பெங்களூரு பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி!

0
112

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் 33 வயதான விராட் கோலி ரன் எடுக்க முடியாமல் திணறுவது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது

. நடப்பு தொடரில் ஒரு சதம் கூட அடிக்காத அவர் 8 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். அதுவும் கடைசி இரு போட்டிகளில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி வழங்கியிருக்கிறார்.

அவரது நிலை தொடர்பாக பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, கோலி இந்த சீசனில் தொடக்கத்தில் நன்றாகத்தான் விளையாடினார்.

முதல் போட்டியில் கிட்டத்தட்ட வெற்றிக்குரிய ரன்களை அடிக்கும் நிலைக்கு வந்தார். அதன் பிறகான ஆட்டங்களில் ரன் அவுட் மற்றும் பேட்டில் சரியாக கிளிக் ஆகாத பந்துகளில் ஆட்டமிழந்தார்.

இது அவருக்கு கடினமான காலமாக இருக்கிறது. அனைத்து வீரர்களுக்கும் இதுபோன்ற நிலைமை வரத்தான் செய்யும். மிக விரைவில் அவர் வலுவான வீரராக திரும்பி வருவார் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு அவரைப் பொறுத்தவரையில் அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். உடல் தகுதியை மேம்படுத்துவது பயிற்சி தேவையான சமயத்தில் ஓய்வெடுப்பது என்று எல்லாவற்றையும் சரியாக செய்ததால் தனக்கு நெருக்கடி வராமல் பார்த்துக் கொள்கிறார்.

தற்சமயம் அவருக்கு சற்றே அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது. நிலைத்து நின்று விட்டால் அதன் பிறகு நிச்சயமாக பெரிய அளவில் ரன் குவிப்பார் என்று தெரிவித்திருக்கிறார்.

Previous articleதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! நிபுணர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்!
Next articleகள்ள காதலால் வந்த வினை! மகன் செய்த செயலால் தந்தை பரிதாபம்!