விராட் கோலியின் அதிரடி சதம்! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிரடி வெற்றி!!

Photo of author

By Sakthi

விராட் கோலியின் அதிரடி சதம்! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிரடி வெற்றி!
நேற்று அதாவது மே 18ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நேற்று அதாவது மே 18ம் தேதி நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், திரிபாதி 15 ரன்களிலும், மார்க்ரம் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க பிறகு களமிறங்கிய கிளாசன் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசன் 51 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணியில் பந்துவீச்சில் பிராஸ்வெல் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
187 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பாப் டுபிளிசஸ் இருவரும் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய பாப் டுபிளிசிஸ் அரைசதம் அடித்து 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய விராட் கோஹ்லி சதம் அடித்து 100 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 19.2 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பெறுவதற்கு சிறிது முன்னேறியுள்ளது. அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பச்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.