விரதம் இருப்பதன் மூலமாக ஏற்படும் பலன்கள்!

Photo of author

By Sakthi

தெய்வ நம்பிக்கை உடையவர்களின் அதிகபட்ச வழிபாடு எந்த ஒரு தெய்வத்தையும் விரதமிருந்து வழிபடுவது தான்.

அதன்படி இன்று ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பதன் மூலமாக என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையன்று விரதம் இருப்பதன் மூலமாக கணவனின் அன்பைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல செவ்வாய்க்கிழமை விரதமிருப்பதன் மூலமாக கணவன் மனைவி உள்ளிட்டோருக்கிடையில் சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. புதன்கிழமை அன்று விரதமிருந்து கடவுளை வழிபட்டால் பிணிகள் யாவும் தீரும் என்று சொல்லப்படுகிறது.

வியாழக்கிழமை அன்று விரதம் இருப்பதன் மூலமாக புத்திர பாக்கியம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலமாக கணவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும், சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை விரதமிருப்பதன் மூலம் நீடித்த நோயிலிருந்து விடுதலை பெற்று ஆரோக்கியத்துடன் வாழலாம் மீண்டும் அந்த நோய் வராமல் தடுத்துவிடலாம்.

ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் மேற்கொண்டால் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் ஆகவே உங்களுடைய நிலைக்கு ஏற்றவாறு விரதமிருந்து பலன்களை பெறுங்கள்.