கன்னி ராசி- இன்றைய ராசிபலன்!! விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

கன்னி ராசி- இன்றைய ராசிபலன்!! விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள். அயன சயன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் விரைய செலவுகள் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள்.

உத்தியோகம் நீங்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்திச் செய்யும் எண்ணம் மேலோங்கும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில செலவுகளை இன்றைய தினம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வீர்கள். கலைத்துறையை சேர்ந்தவர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.